“ஆளுநரும் திமுகவும் ஒன்றாகி விட்டனர்”- ஜெயக்குமார்

 
ஜெயக்குமார்

ஆளுநரும் திமுகவும் ஒன்றாகி விட்டனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக மாநாட்டை தடுக்க முதல்வர் சதி- ஜெயக்குமார்


சென்னை ராயபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சைக்கிளில் சென்று பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “தமிழக ஆளுநரிடம் இனி அனுசரித்து போவதாக பிரதமரிடம் திமுக ஒப்பந்தம் போட்டுள்ளது. இயற்கை மக்கள் பக்கம் இருந்துருக்கு. சென்னையில் மிக குறைவான அளவிலேயே மழை பெய்ததால் அரசு தப்பித்தது. இன்னைக்கு மட்டும் மழை பெய்து இருந்தால் திமுக சாயம் வெளுத்து இருக்கும். அரசை பொறுத்தவரை வேலை பார்ப்பதுபோலக் காட்டிக் கொள்கிறார்கள். பேரிடர் காலங்களை எப்படி எதிர்கொள்வது என எந்த திட்டத்தையும் போடவில்லை. மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாறி மாறி பேசிவருகிறார்கள்.

ஒருநாள் மழைக்கே தாங்கவில்லை என்றால் அரசு எப்படி மக்களை காக்கும். தமிழக அரசு ஷோ காட்டும் வேலையைதான் செய்து வருகிறது. 3 ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகளை முடிக்கவில்லை” என்றார்.