ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்க ஓபிஎஸ் வாய்ப்பு கேட்டுள்ளார்- ஜெயக்குமார்

 
jayakumar

ஓபிஎஸ்-ரஜினி சந்திப்பால் எந்த தாக்கமும் ஏற்படாது, ரஜினியின் அடுத்த படத்தில் குணச்சித்திர வேடம் கேட்பதற்காக ஓபிஎஸ் அவரை சந்தித்திருப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 

ரஜினிகாந்துடன் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு - அரசியல் நிலவரம் குறித்து பேச்சு? |  OPS surprise meeting with Rajinikanth - talk about political situation? -  hindutamil.in

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்ம் “ஓபிஎஸ்-ரஜினி சந்திப்பு எந்த தாக்கத்தையும் ஏற்படாது, ரஜினியின் அடுத்த படத்தில் குணச்சித்திர வேடம் கேட்பதற்காக ஓபிஎஸ் சந்தித்திருப்பார். தெருமுனை கூட்டம் கூட நடத்த வக்கில்லாத ஓபிஎஸ், எப்படி பொதுக்கூட்டத்தை நடத்துவார்?

இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கொள்கையை வரவேற்கின்றன. கடந்த காலங்களில் 1952 தேர்தல் நடைபெற்ற போது நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடந்த போது சுமார் 11 கோடி மட்டுமே செலவானது. தற்போது சுமார் 60 ஆயிரம் கோடி தேர்தலுக்காக செலவாகிறது. பரிணாம வளர்ச்சி, காலத்தின் கட்டாயத்தின்படி இந்தியா முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே தேர்தல் என்பதை வரவேற்கும் விதமாக பார்க்க வேண்டும், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதால் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் கல்வித்துறை பெரிதும் பாதிக்கப்படுவதில்லை. ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் போது தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதிலும் பள்ளி கல்வித்துறைக்கும் சிக்கல்கள் ஏற்படுகிறது.

jayakumar

மேலும் தேர்தல் அடிக்கடி நடைபெறுவதால் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் அடிக்கடி ஒவ்வொரு தேர்தலுக்கும் வந்து செல்வதால் அவர்களின் நேரம் விரயமாகும். அதே நேரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படுவதால் அவர்களது பயண சிரமமும் குறைக்கப்படும் . 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம். விலைவாசி உயர்வு, வரி உயர்வு தேர்தல் காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காவல் துறைக்கு பாதுகாப்பில்லை. இவற்றை மக்கள் உணர்ந்துள்ளனர். திமுக ஆட்சி விரைவில் மூட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்றத் தேர்தல் வரும்போது பெரும்பான்மையுடன் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கும். திமுக எப்போதும் பாதியிலேயே மக்களிடம் செல்வாக்கை இழப்பது வாடிக்கையாகி உள்ளது. அது தற்போது நடந்துள்ளது” என்றார்.