ஊழல் பணத்தை பதுக்கவே ஸ்டாலின் வெளிநாடு பயணம்- ஜெயக்குமார்

 
jayakumar

அதிமுக ஆட்சியில் நீடித்து இருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்து கடைகளையும் மூடி இருப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

துரைக்கண்ணுவின் மரணத்தை கொச்சைப்படுத்துவது கீழ்த்தனமான அரசியல்.. ஸ்டாலினை  வறுத்தெடுத்த ஜெயக்குமார்..! | mk Stalin humble politics.. minister jayakumar

சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “முதலமைச்சர் வெளிநாடு பயணம் என்பது போட்டோ சூட்டுக்கு போனது போல் தான் உள்ளது , வித விதமாக உடை மாற்றி கொண்டு போகிறார். இன்ப சுற்றுலா சென்றுள்ளார். இதற்கு முன்பு சென்ற ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது? ஸ்டாலினின் துபாய் பயணத்தால் எந்த ஒரு பயனும் இல்லை.  ஊழல் பணத்தை பதுக்கவே ஸ்டாலின் வெளிநாடு பயணம் செய்துள்ளதாக பலர் விமர்சிக்கின்றனர். தங்கம் தென்னரசு, அணில் செந்தில் பாலாஜி போல்  சரியாக வசூல் செய்து தரவில்லை என்பதால் துறை மாற்றி உள்ளார் முதலமைச்சர்.

அதிமுக ஆட்சியில் நீடித்து இருந்தால் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி அனைத்து கடைகளையும் மூடி இருப்போம். 2 கோடி உறுப்பினர்களாக அதிகரிக்க தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்படுவது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பெருமை” எனக் கூறினார்.