ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த சூழலில் பாமக கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது.எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில நலன் தேசிய நலனில் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக பாமக அறிவித்துள்ளது. .கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு பொதுக்குழு வழங்கியுள்ளது.
இந்நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். நேற்று இரவு 7 மணிக்கு, திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை சந்தித்தார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுக இன்னும் தொடங்காத சூழலில் சந்திப்பு நடந்துள்ளது. சந்திப்பின்போது கூட்டணி குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டி என பாமக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.