தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஈபிஎஸ், ஓபிஎஸ் அனுமதி

தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக அனுமதி வாங்கியுள்ளனர்.
ராமேஸ்வரம் அடுத்த பாம்பனில் சுமார் 550 கோடி மதிப்பீட்டில் செங்குத்தாக தூக்கக்கூடிய தூக்கு பாலம் கடந்த ஒரு மூன்று ஆண்டுகளுக்கு மேல நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து பாம்பன் பாலத்தை திறந்து வைத்து ரயில் சேவையை ராமேஸ்வரத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமரின் வருகை ஒட்டி பாதுகாப்பு பணிக்காக 10 எஸ்பி, 15 டிஐஜி, 40 டிஎஸ்பி உள்ளிட்ட 3500 போலீசாரை உட்படுத்தி மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
வரும் ஆறாம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் அலுவலகத்திடம் தனித்தனியாக அனுமதி வாங்கியுள்ளனர். இருவரும் மதுரையில் வைத்து பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். பிரதமர் மோடி, நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஆறாம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வழியாக டெல்லி பயணமாகிறார்.