“My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே?- விடாமல் அடிக்கும் ஈபிஎஸ்
தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய @AIADMKOfficial-க்கான வெற்றி முழக்கம் திரு.
@mkstalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின். தன்னை முத்துவேல் கருணாநிதியின் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை! திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்? தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோபத்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்!“My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே? 2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே? இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

