பாஜகவுடன் கூட்டணி புதிய சகாப்தத்திற்கு அடித்தளம்- எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகளுடன் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு உணவருந்திவிட்டு அமித்ஷா டெல்லி புறப்பட்டு சென்றார். தேநீர் விருந்தில் பாஜக சார்பில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், கரு.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இல்லத்தில் இரவு விருந்துக்கு வந்த அமித்ஷாவுக்கு நன்றி கூறியுள்ள ஈபிஎஸ், திமுக செய்த தவறுகளை அதிமுக- பாஜக கூட்டணி சரிப்படுத்தி தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளார்.பாஜகவுடன் கூட்டணி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்புகளுடன் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கை கோர்க்கிறது என்றும் திமுகவின் தீய ஆட்சியில் இருந்து தமிழகத்தை விடுவிக்க கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிரகாசமான, வலிமையான ஆற்றல் மிக்க தீர்மானத்துடன் முன்னேறுகிறது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.