“தேர்தலுக்கு பிறகு விருப்பப்பட்டால் கூட்டணியில் தொடரலாம், இல்லையெனில் அவரவர் கொள்கைப்படி செயல்படலாம்”- ஈபிஎஸ்
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக அடிமையாக உள்ளதாகவும், அதிமுக கூட்டணி அப்படி அல்ல தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளோம், முடிந்த பிறகு கூட்டணி கட்சிகள் அவர்கள் கொள்கைப்படி செயல்படலாம் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரவாயல் தொகுதி மற்றும் பூந்தமல்லி தொகுதிக்கு பரப்புரை மேற்கொண்டார். வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய அவர், திமுக பொருத்தவரை இந்த தேர்தலில் பூஜ்ஜியம் தான் கிடைக்கப்போகிறது என்றும் அதிமுகவிற்கு ராஜ்ஜியம் கிடைக்கும் என்று கூறிய அவர் திமுக 5000 அறிவித்தது சூப்பர் ஹிட் என்று ஸ்டாலின் தெரிவித்ததாகவும், ஆனால் அதிமுக 10 ஆயிரம் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளதான் சூப்பர் ஹிட் என்று தெரிவித்தவர். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது இதன் காரணமாக தான் 5000 திட்டத்தை அறிவித்தார் என்றும் 2026க்கு முன் கோடை காலம் வரவில்லையா கடந்த நான்காண்டுகளில் கோடை காலம் வரவில்லையா? என்று கேட்ட அவர் அப்போதெல்லாம் அறிவிக்காத ஸ்டாலின் தற்போது தேர்தல்காக இது போன்று திட்டங்களை அறிவித்து வருவதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் வீட்டு வரி கடை வரி மின் கட்டணம் 50% மேல் அதிகரித்துள்ளதாகவும், திமுக திட்டங்களை பட்டியலிட்டு திமுக திட்டங்கள் மக்களுக்கு புரியுமா? பெயர் வைப்பதற்கு நோபல் பரிசு என்றால் அதனை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம் என்று தெரிவித்தார். அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்தார். அதிமுகவை அடிமை என்று கூறுகிறார்கள் திமுக தான் காங்கிரஸின் அடிமை என்றும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் திமுகவை மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி இருக்குமா என்ற கேள்வியை மக்களுக்கு வந்துவிட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த 10 ஆண்டுகளாக அடிமையாக உள்ளது அதிமுக கூட்டணி அப்படி அல்ல தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளோம் முடிந்த பிறகு கூட்டணி கட்சிகள் அவரவர்கள் கொள்கைப்படி செயல்படலாம் என்று அவர் தெரிவித்தார்

