’’தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை’’- எடப்பாடி பழனிசாமி
கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “ஜூலை 7ல் எனது சுற்றுப்பயணத்தை தொடங்கினேன். அன்று முதல் இன்று வரை வேறெந்த தொகுதியிலும் கடையநல்லூர் அளவுக்கு மக்கள் வெள்ளத்தை பார்க்கவில்லை. நமக்கு பாதுகாப்பாக இருக்கின்ற ஒரு காவல்துறை அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் நமக்கு யாரு பாதுகாப்பு கொடுப்பது? காவல்துறை உதவி ஆய்வாளர் படுகொலை செய்யப்பட்டிருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது என அடிக்கடி நான் வலியுறுத்துவது நிரூபணம் ஆகியுள்ளது.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. அதிமுக ஆட்சியின் போது சட்டம் தன் கடமையை செய்தது. தமிழ்நாட்டில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லா சூழல் நிலவுகிறது. திமுக ஆட்சியில் ரெளடிகள் கலாச்சாரம் பெருகிவிட்டது” என்றார்.

