மீனவர்கள் பிரச்சனைக்கு கச்சத்தீவு மீட்பு ஒன்றே நிரந்தரத் தீர்வு- எடப்பாடி பழனிசாமி

வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்கதையாக உள்ளது. கச்சத்தீவு மீட்பு ஒன்றே இதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும்.
வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களையும், அவர்தம் உடைமைகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) July 2, 2024
இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்படுவது தொடர்கதையாக…
கச்சத்தீவை மீட்க தொடர்ச்சியான சட்டப் போராட்டம் நடத்திய ஒரே இயக்கம் அதிமுக என்ற அடிப்படையில், கச்சத்தீவில் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமைகளை முழுமையாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய பாஜக கூட்டணி அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.