"யார் யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து பேசி விரைவில் முடிவெடுக்கப்படும்"- ஈபிஎஸ்

 
ச்

எங்கள் கூட்டணியில் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக நடைபெற்றதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “எங்கள் கூட்டணியில் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக நடைபெற்றது. அதிமுக அலுவலகத்தில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. கருத்துகளை பரிமாறவே டெல்லி செல்கிறோம். எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி, நிச்சயம் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். மற்ற கட்சிகளுடன் இன்று இரவுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி முடிப்போம். யார் யாருக்கு எந்த தொகுதி என்பது குறித்து பேசி விரைவில் முடிவெடுக்கப்படும். 

அதிமுக கூட்டணியில் குழப்பம் இல்லை. இது உணர்வுப்பூர்வமான கூட்டணி. வேண்டுமென்றே திட்டமிட்டு திமுக தலைவர், கூட்டணி தலைவர்கள் எங்களை விமர்சனம் செய்கின்றனர். திமுக கூட்டணியில்தான் தொகுதி பங்கீட்டில் சிக்கல். நாங்கள் டெல்லி சென்றால் திட்டமிட்டு அவதூறு பரப்புவது முதல்வர் ஸ்டாலினுக்கு வாடிக்கை. திமுக கூட்டணியில் 20 நாட்களாக பேச்சு நடத்தினர். எங்கள் தரப்பில் காலையில் வந்தார்கள், மாலையில் அறிவித்தோம். நாங்கள் டெல்லி சென்றாலே ஸ்டாலின் பயப்படுகிறார்” என்றார்.