இனி திமுக எப்போதும் ஆட்சிக்கு வராது- எடப்பாடி பழனிசாமி

 
EPS EPS

திமுக இனி மீண்டும் ஆட்சிக்கு வராது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை, சூளை பகுதியில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக பொதுச் சயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரும் என முதலமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால் 2026 தேர்தல் திமுகவுக்கு இறுதித் தேர்தல். திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. 4ல் ஒரு பங்கு வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை.  தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் ஒரு பக்கம் போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் ஒரு பக்கம் போராட்டம் செவிலியர்கள் ஒரு பக்கம் போராட்டம், இப்படி எங்கு பார்த்தாலும் போராடிக் கொண்டிருக்கும் அளவுக்கு மக்கள் வெறுப்பை வெறுப்பை திமுக சம்பாதித்துள்ளது. இந்த தேர்தலோடு திமுகவுக்கு மக்கள் விடை கொடுத்துவிடுவார்கள்.” என்றார்.