“குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் செய்து வரும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்”- இபிஎஸ்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “இன்றைய தினம் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டத்தை கூட்டி உள்ளார். இந்த பொதுக்கூட்டமாக அல்லாமல் மாநாடாக பார்க்கபட்டது. கிட்டதட்ட ஐந்து லட்சம் மக்கள் பங்கேற்று மாநாடு போல் இந்த கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் செயல்படுத்துவோம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். மேலும் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வோம் எனவும் பிதரமர் கூறி உள்ளார். திமுக ஆட்சியில் போதை பொருட்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழல், ஊழல் ஆட்சி தான் நடத்து வருகிறது. இந்த தீயசக்தி மற்றும் குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் செய்து வரும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்த கூட்டணி ஒரு வெற்றி கூட்டணி. தமிழகம் வளர்ச்சிக்கான கூட்டணியாக NDA கூட்டணி அமைத்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். அதிமுக கூட்டணி அமைக்க தடுமாற்றம், ஆனால் இப்போது எங்கள் கூட்டணியில் பல கட்சிகள் வந்துள்ளது. இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளது. தற்போது வலிமையான கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளது. அந்த கட்சிகள் யார் என வெளிபடையாக பேச முடியாது. கட்சிகள் வரும் போது உரிய முறையில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். இந்த கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும், 210 இடங்களில் மேல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியை உருவாக்க வேண்டும் மக்கள் விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் போராடும் சூழல் உள்ளது. தமிழகத்தில் போராட்டம் நடக்காத நாட்களே இல்லை, கலவரம் பூமியாக தமிழகம் உள்ளது” என்றார்.

