“தெளிவா முகத்தை காட்டிட்டுதான் போறேன்”- செய்தியாளர்களிடம் ஈபிஎஸ் அதிரடி
அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.

தொகுதிப் பங்கீடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீதான ஊழல் புகார் பட்டியலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொகுதி பங்கீடு குறித்து பாஜக தலைவர்களுடன் பழனிசாமி ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூசஷ கோயலையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
தெளிவா முகத்த காட்டிட்டு தான் வருவேன். போன தடவ மாதிரி போட்டு விட்டுறாதிங்க - @EPSTamilNadu pic.twitter.com/mbEARNnRoG
— Vignesh Theni (@Vignesh_twitz) January 7, 2026
முன்னதாக டெல்லி சென்ற பின் அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அமித்ஷாவை சந்திக்க டெல்லி போறேன்... தெளிவா முகத்த காட்டிட்டு தான் வருவேன். போன தடவ மாதிரி போட்டு விட்டுறாதிங்க” எனக் கூறிவிட்டு சென்றார்.


