அதிமுக தலைமையிலான கூட்டணி இல்லங்க... "அதிமுக-பாஜக" தலைமையிலான கூட்டணி- ஈபிஎஸ்
திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் உடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். மத்திய அமைச்சர் பியூஷ்கோயலை சந்தித்து பேசினோம். என்.டி.ஏ கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாக சிறப்பான ஆலோசனை நடைபெற்றது. மேலும் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் கேட்டறிந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் "அதிமுக-பாஜக" தலைமையிலான கூட்டணி ஒன்றிணைந்து எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம்” என்றார்.

இதுவரை "அதிமுக" தலைமையிலான கூட்டணி என சொல்லி வந்த பழனிசாமி இன்று பாஜக பியூஸ் கோயல் சந்திப்பிற்கு பிறகு "அதிமுக-பாஜக" தலைமையிலான கூட்டணி என கூறி உள்ளார். பாஜகவுக்கு சரிபாதி தொகுதி ஒதுக்க வேண்டும் என பியூஸ் கோயல் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது பாஜகவுக்கு 50 தொகுதிகள் வேண்டுமென கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு அதிமுக மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


