"எதுவும் கூற விரும்பவில்லை" - ஈபிஎஸ்
Nov 27, 2025, 16:25 IST1764240945551
செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை, அவரைப்பற்றி சொல்ல ஒன்றும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “செங்கோட்டையன் அதிமுகவில் இல்லை, அவரைப்பற்றி சொல்ல ஒன்றும் இல்லை. ஆண்டவன் தண்டிப்பார். ஒருவர் கருத்தில் மற்றொருவர் தலையிட முடியாது, ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. அதனால் செங்கோட்டையன் விமர்சிக்கிறார். அவர் பற்றி மேலும் நான் ஏதும் கூற விரும்பவில்லை" என்றார்.
முன்னதாக செங்கோட்டையன், ஆணவத்தில் இருப்பவனை ஆண்டவன் தண்டித்துவிடுவான் என்று கூறியிருந்தார். அதற்கு ஈபிஎஸ் இவ்வாறு பதிலளித்தார் என்பது குறிப்பிடதக்கது.


