கைப்பாவை டிஜிபியை நியமிக்க முயற்சி - ஈபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

 
கைப்பாவை டிஜிபியை நியமிக்க முயற்சி - ஈபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி கர்நாடக அரசிற்கு காவிரி நதியில் அணை கட்ட எந்தவிதமான உரிமையும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப்போக்குடன் தான் உள்ளது. தனக்கு வேண்டியவர்களை டிஜிபியாக நியமிப்பதற்காக நிரந்தர டிஜிபியை நியமிக்கவில்லை. தங்களுக்கு கைப்பாவையாக இருக்கக்கூடிய டிஜிபியை நியமிக்க அரசு காலதாமதம் செய்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி கர்நாடக அரசிற்கு காவிரி நதியில் அணை கட்ட எந்தவிதமான உரிமையும் இல்லை. காவிரி நதிநீரை தடுக்கவோ, மடைமாற்றம் செய்யவோ கர்நாடக அரசுக்கு உரிமை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு செயல்படுவது கண்டிக்கதக்கது. மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும். மேகதாது விவகாரத்தில் தமிழநாடு அரசு மெத்தன மோக்குடன் செயல்படுகிறது. திமுகவும், காங்கிரஸும் நினைத்தால் மேகதாது அணை பிரச்சனையை தீர்த்துவிடலாம். 

டெல்டாவில் தொடர்மழையால் 22% ஈரப்பத நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. நிராகரிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இருக்கும். அது என்ன காரணம்? என தெரியவந்தால்தான், நான் கருத்து சொல்ல முடியும். அதிமுக ஆட்சியில் ஆட்சியில் ஜவுளி பூங்கா, ராணுவ தளவாட தொழிற்சாலைக்கு இரும்பாலைக்கு சொந்தமான இடத்த வழங்க கேட்டும், அதற்கு வழிகாட்டி மதிப்பீடு தொகை கொடுத்தால் தருவதாக சொன்னார்கள். ஆனால் திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டது. அதனால் மக்கள் இப்போது போராட்டம் நடத்துகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரையோ காப்பாற்ற முயற்சி நடக்கிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை யார் விசாரித்தால் என்ன? ஏன் அச்சம்? ஒவ்வொரு முறையும் சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வது ஏன்?” என்றார்