எஸ்.பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் ஈபிஎஸ் ஆப்சென்ட்!

 
ச்

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி இல்ல திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளவில்லை.

Image

அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும்,  முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாஷ் திருமணவிழா கோவை ஈச்சனாரி பகுதியில்  உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள்  கலந்து கொண்டனர், தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும்  பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், குஷ்பூ மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

Image


அதிமுகவின் செங்கோட்டையன் உள்ளிட்ட பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கவில்லை.