அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு! மூத்த தலைவர்களுடன் ஈபிஎஸ் ஆலோசனை
எடப்பாடி பழனிசாமியின் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் அதிமுக மூத்த தலைவர்களான கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எஸ்பி வேலுமணி உடன் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று மாலை 4:30 மணி அளவில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கேபி முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி, துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தனர். இதன் பின்னர் சிறிது நேரத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் பின்னர் திண்டுக்கல் சீனிவாசன் அவரது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இதன் பின்னர் மாலை 6.30 மணி வரை நத்தம் விசுவநாதன், எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர் நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி ஆகியோர் தனித்தனி காரில் புறப்பட்டு சென்றனர். இவர்களிடம் பேட்டி கேட்டபோது ஏதும் தெரிவிக்காமல் சென்று விட்டனர்.


