அமித்ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டார் ஈபிஎஸ்
தொகுதிப் பங்கீடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த அமித் ஷாவை அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சந்தித்தார். அப்போது பா.ஜ.க விற்கு 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும், கூட்டணியில் ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி தினகரன் ஆகியோரை சேர்க்க வேண்டும் என அமித்ஷா கூறியதாக தகவல் வெளியானது. மேலும் இன்று எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்க நேரம் ஒதுக்கதாக கூறப்பட்டது. ஆனால் நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி வரவில்லை. இதனால் அமித்ஷா அதிருப்தியில் டெல்லி திரும்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டார். பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலையும் சந்திக்க திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


