"தேர்தலில் வெல்லவே கூட்டணி அமைத்தோம்"- எடப்பாடி பழனிசாமி

 
eps eps

தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும். தீய சக்தியை ஒழிக்கவே இயேசு வந்தார். சிறுபான்மை மக்களின் காவலன் அதிமுக. கிறிஸ்தவர்களை எம்ஜிஆர் மிகவும் நேசித்தார். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கும் இயக்கம் அதிமுக. அதிமுகவை பொறுத்தவரை மதம், ஜாதிக்கு அப்பாற்பட்ட கட்சி அனைத்து மதத்தினரையும் சமமாக கருதும் கட்சி. தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் கூட்டணி வைத்துள்ளோம். தேர்தல் கூட்டணி என்பது வேறு, கொள்கையில் அதிமுக எப்போதும் உறுதியாக உள்ளது. 

கிறித்துவ மக்களை பெருமைப்படுத்தும் விதமாக அதிமுக சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாப்படுகிறது. கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் போடப்படும் ஒரு ஒப்பந்தம் மட்டுமே, அது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. கொள்கைதான் அதிமுகவின் உயிர் மூச்சு. திமுக ஒரு தீய சக்தி. ஓநாய்களை நம்பி ஆடுகள் ஏமாறும், அதுபோல் ஏமாற கூடாது” என்றார்.