"பாசம் என்று சொன்னால்.. தாய்-தந்தையுடன் வாழ வேண்டும், கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும்"- இபிஎஸ்
தீய சக்தி திமுகன்னு சொன்னீங்க.. இனிமேல் அப்படி கிடையாது.. தீய சக்தி TVK தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, மாமனாக இருப்பேன். வீட்டில் ஒருவனாக இருப்பேன் என்று ஒவ்வொரு மேடையிலும் த.வெ.க தலைவர் விஜய் சொல்கிறார். இது எவ்வளவு பெரிய பச்சைப் பொய்? பாசம் என்று சொன்னால் தாய், தந்தையோடு வாழ வேண்டும். கட்டிய மனைவியோடு, பெற்ற பிள்ளையோடு வாழ வேண்டும். பாசமும் அன்பும் அங்கேதான் பிறக்கும். இது உங்களிடம் இருக்கிறதா? மேடையிலே வீரவசனம் பேசினால் மட்டும் போதாது. நிஜ வாழ்க்கையிலே வாழ்ந்து காட்ட வேண்டும்.திமுகவாக இருந்தாலும் சரி, தவெகவாக இருந்தாலும் சரி அங்கு இருப்பவர்கள் அதிமுகவினர்தான். அதிமுக கரைந்து விடும் என்கிறார் ஆதவ் அர்ஜுனா. அதிமுக என்ன சர்க்கரையா? முதல்வர் விஜய் என்ன சாதனை செய்வார் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவால் சொல்ல முடியுமா? ஆதவ் அர்ஜூனா ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லை. பாசம் என்று சொன்னால்.. தாய், தந்தையுடன் வாழ வேண்டும், கட்டிய மனைவியுடன் வாழ வேண்டும்.. பெற்ற பிள்ளையோடு வாழ வேண்டும், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுக்கும் ஒரே முதலமைச்சர் விஜய்தான்” என்றார்.

