“எங்க அனுபவம் அளவிற்குகூட உங்க வயசில்லை... அடக்கி வாசிங்க விஜய் தம்பி”- இபிஎஸ்

 
eps

கரூர் சம்பவம் முடிந்து 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவர் எப்படி நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்? என  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


இடைத்தேதலை முன்னிட்டு மதுராந்தகத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “சினிமாவில் மட்டும் நடித்துக்கொண்டிருந்தவர் இன்று நிஜ வாழ்விலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதல்வர் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பினால், திங்கட்கிழமை காலைதான் பணிக்கு வருகிறார். கரூரில் 41 பேர் இறந்தபோது ஓடி ஒளிந்து சென்னையில் போய் அமர்ந்துகொண்டார் முதல்வர் விஜய். கரூர் சம்பவம் முடிந்து 72 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராதவர் எப்படி நாட்டு மக்களைக் காப்பாற்றுவார்? உல்லாச சுற்றுப்பயணத்திற்காக வெளிநாடு போனாங்க.. எதுக்கு போனாங்கனு உங்களுக்கே தெரியும்.. நான் சொல்ல மாட்டேன்…

மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் டெபாசிட் இழக்க வேண்டும். குதிரை பேரத்தில் விலை போய்விட்டதால் மதுராந்தககத்தில் இடைத்தேர்தல் திணிக்கப்பட்டுள்ளது. ஓட்டுபோட்ட மக்களை மறந்து தவெகவில் சேர்ந்தவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்யவைத்து தவெகவில் சேர்த்தது வெட்கக்கேடு. 2 ஆண்டுகள் அதிமுகவிற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.. எங்கள் அனுபவம் அளவிற்குகூட உங்கள் வயசில்லை. அடக்கி வாசிங்க தம்பி... வெற்றி - தோல்வி பற்றி அதிமுக கவலைப்படாது. மக்களைப் பற்றி தான் கவலைப்படுவோம். எங்களைப் பார்த்தா, தூர்ந்து போன கட்சின்றீங்க. அதிமுக-வில் இருந்து விலைக்கு வாங்கி வேட்பாளரை நிறுத்திவிட்டு இன்றைக்கு என்னென்னவோ பேசுகிறார்களே... இந்த ஜாம்பவான்கள் எல்லாம் கரூர் சம்பவம் நடந்தபோது எங்கே போனீர்கள்? ரீல்ஸும், ரீலு்்தான் தவெகவின் மூலதனம். தவெக நெல்லிக்காய் மூட்டை போன்றது; சிதறிப் போய்விடும். கரூர் வழக்கு இருக்கிறது, இன்னும் அந்த வழக்கு முழுமை பெறவில்லை. அது முழுமை பெறும்போது தீர்ப்பு எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அந்த தீர்ப்புக்குப் பிறகு தான் அந்தக் கட்சி தமிழகத்தில் இருக்குமா, இல்லையா என்பது முடிவாகும்” எனக் கூறினார்.