குப்பைக்கு கூட வரி விதித்துள்ளது திமுக அரசு- இபிஎஸ் குற்றச்சாட்டு

 
குப்பைக்கு கூட வரி விதித்துள்ளது திமுக அரசு- இபிஎஸ் குற்றச்சாட்டு

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்ததை மு.க. ஸ்டாலின் கொண்டாடுகிறார். அவர் சுதந்திர போராட்ட தியாகியா? ஊழல் செய்து உள்ளே சென்றவர் தானே? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சி பிரச்சாரத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பணத்தை திருடுவார்கள், நகையை திருடுவார்கள், ஆனால் திமுக ஆட்சியில் கிட்னி திருடுகிறார்கள். கிட்னி முறைகேடு தொடர்பாக அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்குச் சென்றால், உங்கள் உறுப்புகள் இருக்கிறதா? என்று ஸ்கேன் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.நகர்ப்புற வளர்ச்சித் துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை ஆதாரத்தை திரட்டி வழக்குப் பதிவு செய்ய முறையிட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து 5 ஆண்டுகளில் ரூ. 24 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளனர். செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்ததை மு.க. ஸ்டாலின் கொண்டாடுகிறார். அவர் சுதந்திர போராட்ட தியாகியா? ஊழல் செய்து உள்ளே சென்றவர் தானே?மின்சார கட்டணம், குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி ஏன் குப்பைக்கு கூட வரி விதித்துள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த பிரச்னைகள் தீர்க்கப்படும்” என்றார்.