"பால்டாயில் குடிச்சது எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுங்க! இத மட்டும் சொன்னேன், உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது”- இபிஎஸ்
அண்ணா, எம்ஜிஆா் மறைந்தாலும் அவா்களின் கொள்கைகளை பின்பற்றி தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறி உள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “அண்ணா, எம்ஜிஆா் மறைந்தாலும் அவா்களின் கொள்கைகளை பின்பற்றி தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறி உள்ளது. அனைத்து மக்களுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டுமென்று தான் எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அதிமுக எவ்வளவோ சோதனைகளை சந்தித்தது. அதிமுக ஆட்சிக்கு துரோகம் புரிந்து எட்டப்பனோடு எட்டப்பனாக எதிரிகளோடு பன்னீர்செல்வம் சேர்ந்தார். அதிமுகவில் தலைமைக்கு விஸ்வாசமாக இருந்தால் உயர் பதவி தேடிவரும். அதிமுகவின் வெற்றி வாய்ப்பை தென்மண்டலங்களில் திட்டமிட்டு B-டீமா இருந்து கெடுத்த எட்டப்பர் அடையாளம் காட்டப்பட்டபின், இப்போ தீய சக்தியோடு கை கோர்த்துவிட்டார், ஓபிஎஸ்-க்கு உயர்ந்த பதவிகளை கொடுத்து அழகுபார்த்த கட்சி அதிமுக. 2021 தேர்தலில் எதிரிகளுடன் சேர்ந்து கூட்டு சதி செய்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
என் சுற்றுப்பயணத்தில் உதயநிதி ஸ்டாலின் என்ற பெயரை நான் உச்சரிக்கவே இல்லை. பால்டாயில் குடிச்சது எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுங்க! இத மட்டும் சொன்னேன் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. நான் சொல்றதை கேட்கல மக்கள் பிரச்னைய பேசாம அஞ்சு வருஷம் திமுகவுக்கு ஜால்ரா தான் தட்டினாங்க.அதுக்குதான் திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ்க்கு கிடைத்த பரிசு இந்த தேர்தலில் ஒரு இடம் குறைவு” என்றார்.



