“பதவி கிடைத்தது, அதனால் காலில் விழுந்து ஆசி வாங்கினேன்”- எடப்பாடி பழனிசாமி

 
“பதவி கிடைத்தது, அதனால் காலில் விழுந்து ஆசி வாங்கினேன்”-   எடப்பாடி பழனிசாமி 

பொறுப்பு கிடைத்தது, அதனால் காலில் விழுந்து ஆசி வாங்கினேன் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை ராயபுரத்தில்  பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் சில B-Team இருந்தார்கள் அவர்கள் கட்சியிலிருந்து துடைத் தெரியப்பட்டார்கள். எப்போது பார்த்தாலும் காலில் விழுந்தேன், விழுந்தேன் என்கிறார்கள். பதவி கிடைத்தது, பொறுப்பு கிடைத்தது. அதனால் காலில் விழுந்து ஆசி வாங்கினேன். ஆசிர்வாதம் வாங்குவது தமிழர்களின் பண்பாடுதானே. திமுக அதிகாரிகளை நம்பித்தான் இருக்கிறார்கள். அவர்கள் மக்களை நம்பியில்லை. யாரைப் போட்டால் இவர்களுக்கு என்ன கஷ்டம்? நேர்மையான முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென்று தேர்தல் ஆணையம் விரும்புகிறது. யார் வந்தால் என்ன? மக்கள்தானே ஓட்டு போடுகிறார்கள். 5 வருடமாக திமுக ஆட்சியில் அதிகாரிகள் அவர்களுக்கு கூஜா தூக்கிக் கொண்டு இருந்தார்கள்.  நடுநிலையாக தேர்தல் நடத்த வேண்டுமென்று இந்த மாறுதல்கள் நடக்கின்றன என்று நான் கருதுகிறேன்.

பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அடிமையா? அமித்ஷா என்ன பாகிஸ்தான் நாட்டுக்காரரா? மக்களுடைய செல்வாக்கை இழந்துள்ளதால் திமுக பதறுகிறது. நாங்கள் ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்ததால்தான் பல திட்டங்களைத் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தோம். எதற்கு வீராப்பு காட்ட வேண்டும்? மோடிதான் அதிகாரம் மிக்கவர். கல்லூரி காலத்தில் இருந்து அதிமுகவிற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன். யாராலும் அதிமுகவை விலைக்கு வாங்க முடியாது. அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சி. இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல்.” என்றார்.