“கூப்பன் கொடுப்பது கமிஷன் அடிப்பதற்காகத்தான்” - எடப்பாடி பழனிசாமி

 
கூப்பன் கொடுப்பது கமிஷன் அடிப்பதற்காகத்தான் -  எடப்பாடி பழனிசாமி 

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜோலார்பேட்டையில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “அண்மையில் இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதன்படி அதிமுக ஆட்சி அமைந்ததும் தமிழ்நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். தமிழ்நாட்டில் ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா என 4 அதிகார மையங்கள் உள்ளன. தமிழ்நாடு தலைகுனிய இந்த 4 அதிகார மையங்கள்தான் காரணம். ஸ்டாலின் மருமகன் சபரீசன் பொதுவெளியில் வந்துவிட்டார். தமிழ்நாட்டை கூறுபோட்டு ஆட்டிப்படைத்து வருகின்றனர். கூப்பன் கொடுப்பது கமிஷன் அடிப்பதற்காகத்தான். திமுக ஆட்சி விளம்பர ஆட்சி. தினந்தோறும் ஒரு அறிவிப்பு வெளியிட்டு பெயர் வைத்ததும் முடிந்துவிடும். அறிவிப்பு வெளியிட்டு பெயர் வைத்ததும் முடிந்துவிடும். 

தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய நேரம் வந்துவிட்டது. அது உங்களிடம் தான் உள்ளது. 10 ஆண்டு காலம் அதிமுகவின் சிறப்பான ஆட்சி நடைபெற்றது. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட மூக்கு மேல் விரல் வைத்தனர். வாக்குக்காக அல்ல, மக்களுக்காக ஆட்சி செய்கிறோம். மீண்டும் தமிழகம் தலை நிமிர வேண்டும் என்றால் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை” என்றார்.