சி.வி. சண்முகத்தை புறக்கணித்த ஈபிஎஸ்- அதிமுகவில் வெடிக்கும் அடுத்த பிரச்சனை

 
CV Shanmugam

3 நாட்கள் அதிமுக தொடக்கவிழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.


அதிமுகவின் 55ஆவது ஆண்டை முன்னிட்டு தொடக்கவிழா பொதுக்கூட்டம் அக்.17, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.17ம் தேதி செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க இருக்கிறார். அ.தி.மு.க.வின் 55ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி 85 கட்சி மாவட்டங்களில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களுக்கு யார் யார் தலைமை ஏற்கிறார்கள் என வெளியிடப்பட்ட பட்டியலில் சி.வி. சண்முகம் பெயர் இடம் பெறவில்லை.


இந்நிலையில் நேற்றைய தினம் மூன்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முக்கிய ஆலோசனை செய்து இருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சரின் வாரிசு மற்றும் முன்னாள் அமைச்சரின் சகோதரர் ஆகிய இருவரும்  இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். இந்த  இடைத்தேர்தலில் மூன்றாவது இடம் போனதற்கு எடப்பாடி அவர்களே காரணம் எனவும் பேசப்பட்டிருக்கிறது. இவர்கள் மூன்று பேரும் பேசிய ஒரே விஷயம் தலைமை மாற்ற வேண்டும் கூட்டு தலைமையை கொண்டு வர வேண்டும் என பேசி இருக்கிறார்கள். அதிமுக தலைமைக்கு புதியதோர் ஒருவர் வரவேண்டும், அப்பொழுதுதான் கட்சி எழுச்சி பெறும், கட்சியில் இருந்து விலகி சென்றவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனவும் அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசியிருக்கிறார்கள். இன்று அல்லது நாளையோ ஏதோ ஒரு அறிவிப்பு வரும் அல்லது செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சியை மறுசீரமைப்பு செய்து தலைமைக்கு வேறு ஒருவரை மாற்றம் செய்தால்  அதிமுக மீண்டும் இல்லையென்றால்  அதிமுக என்ற கட்சி எந்த நிலைமைக்கு செல்லும் என்பதை யூகிக்க முடியவில்லை.