இபிஎஸ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
எடப்பாடி பழனிசாமி பெயரில் ரூ.50 லட்சம் அசையும் சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், மார்ச் 30ம் தேதி துவங்கியது சட்டசபை தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை 8-வது முறையாக தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி பெயரில் ரூ.50 லட்சம் அசையும் சொத்து உள்ளதாக வேட்புமனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசையா சொத்து ஏதுமில்லை. எடப்பாடி பழனிசாமி பெயரில் விவசாய நிலம் ஏதும் இல்லை. மனைவி ராதா பெயரில் 6 இடங்களில் நிலமும், பண்ணை வீடும் உள்ளது. மேலும் அவரது பெயரில் ரூ.3.45 கோடி அசையா சொத்து உள்ளது என்றும், ரூ.2.16 கோடி அசையும் சொத்து உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

