"கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொன்னதை தான் சொன்னேன்"- ஈபிஎஸ்

 
s

கலைஞரை வீட்டுச்சிறையில் வைத்ததாக நான் சொல்லவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஆரணியில் பரப்புரையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “கலைஞரை வீட்டுச்சிறையில் வைத்ததாக நான் சொல்லவில்லை. சொன்னது ஆ.ராசா தான். கருணாநிதியை வீட்டு சிறையில் வைத்ததாக ஆ.ராசா சொன்னதை தான் சொன்னேன். முதல்வர் தனது கோபத்தை என்னிடம் காட்ட கூடாது.. ஆ.ராசாவிடம் காட்ட வேண்டும். கலைஞரை வீட்டு சிறையில் வைத்தவர்களை அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்டறிந்து தண்டனை பெற்றுதரப்படும். நான் பேச வந்ததை ஸ்டாலின் உற்றுநோக்க வேண்டும். உங்கள் கோபத்தை என் மீது காட்டாதீர்கள். டாஸ்மாக் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கி இதுவரை ரூ.24,000 கோடி ஊழல் செய்துள்ளனர். திமுக பிரமுகர்களால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதால் காவல்துறையால் கட்டுப்படுத்த முடியவில்லை.

துரைமுருகன் 2021 தேர்தலின்போதே இதுதான் எனக்கு கடைசி தேர்தல், எனக்கு வயதாகிவிட்டது. எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்டார். தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். உங்களுக்குப் பெருமை கிடைக்கிறதுக்கு மக்களா கிடைச்சாங்க? கடன் வாங்குவதில் தான் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது. எ.வ.வேலு கட்டிய பாலம் தண்ணீாில் அடித்துச்செல்லப்பட்டது, தரமில்லா பாலத்தை கட்டி கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஆற்றின் அருகில் அதிமுக ஆட்சியில் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட தகன மேடை உறுதியாக உள்ளது, திமுக கட்டிய பாலம் நீாில் சென்றது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தரமில்லாத பாலம் கட்டப்பட்டது தொடா்பாக அதிமுக ஆட்சி அமைந்த உடன் விசாரணை நடத்தப்படும்” என்றார்.