26ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறாரா ஈபிஎஸ்?
தூத்துக்குடியில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய தொகுதிகளில் வரும் 26ஆம் தேதி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்த நிலையில், சுற்றுப்பயணம் 29ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகவே அன்றைய தினம் தூத்துக்குடியில் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
2 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி 26ஆம் தேதி விரிவாக்கப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறக்கிறார். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தால் அதிமுக- பாஜக கூட்டணி உருவான பிறகு இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பாக அது அமையும்.


