தேவர்குளம் காவல் நிலையத்தில் சமுதாய ரீதியாக குறிவைத்து பொய் வழக்கு- ஈபிஎஸ் கண்டனம்

 
eps

தேவர்குளம் காவல்நிலையப் பிரச்சினை முழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

eps

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்தில் மக்களை சமுதாய ரீதியாக குறிவைத்து பொய் வழக்கு பதியப்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்துள்ளதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. 


விடியா திமுக ஆட்சியில் காவல்துறை பாரபட்சமாக செயல்பட்டு வருவதும், சமுதாய ரீதியாக மக்களை அணுகி பொய் வழக்குகள் பதிவதும் கடும் கண்டனத்திற்குரியது. "சட்டத்தின் முன் அனைவரும் சமம்" என்ற கோட்பாட்டை சட்டத்தை நிலைநிறுத்தும் பொறுப்பில் உள்ள காவல்துறையினர் உணரவேண்டும். தேவர்குளம் பகுதியில் பதிந்துள்ள வழக்குகளின் தன்மையை ஆராய்ந்து, பொய் வழக்குகளை வாபஸ் பெற்று, இனி தமிழ்நாட்டில் எங்கும் சாதிய கண்ணோட்டத்துடன் பொய் வழக்குகள் பதியாவண்ணம் உரிய உத்தரவைப் பிறப்பிக்குமாறு விடியா அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.