"ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை" - திமுக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்!!

 
eps

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர வேண்டும் என அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

death

சென்னை பெருங்குடியில் உள்ள பெரியார் சாலையில் வசித்துவரும், வங்கி அதிகாரி மணிகண்டன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   தனியார் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த இரண்டு மாத காலமாக அவர் வேலைக்குச் செல்லவில்லை என தெரிகிறது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாக இருந்த மணிகண்டன், நண்பர்களிடம் கடன் வாங்கி  ரூ.1 கோடி வரை இழந்துள்ளார். கடன் தொல்லை அதிகமான நிலையில், கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று மணிகண்டன் மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்துக் கொன்று விட்டு, இரு குழந்தைகளையும் தலையணையால் அழுத்தி  கொலை செய்து விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில் அதிமுக எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பக்கத்தில், "ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனால் வங்கி ஊழியர் திரு.மணிகண்டன் அவர்கள் தனது குடும்பத்தினரை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும், இந்த திமுக அரசின் மீது கோபத்தையும் ஏற்படுத்துகிறது. அம்மா அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்திருந்தது, நீதிமன்ற உத்தரவால் மீண்டும் ஆன்லைன் சூதாட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இளைஞர்கள்  மற்றும் பல குடும்பங்களையும் பாழாக்கும் இத்தகைய சூதாட்டத்தை அரசு சட்டம் இயற்றி தடை செய்ய மறுப்பது கண்டிக்கத்தக்கது.உடனடியாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கொண்டு வர இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.