"நோய்த் தொற்றால் ஏற்படும் உண்மை பாதிப்புகளை மறைக்காதீர்கள்" - ஈபிஎஸ் வேண்டுகோள்!!

 
stalin

கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்று பாதிப்பின் உண்மை விபரங்களை மக்களிடம் எடுத்துக் கூறவேண்டும் என்று ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், " அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒமிக்ரான் பரிசோதனை மையங்களை உடனடியாக விடியா  அரசு ஏற்படுத்த வேண்டும்.  எந்தவித நோய் தொற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை மக்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டிய அடிப்படை கடமை இந்த அரசுக்கு உண்டு.

corona

வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டவர்களுக்கு ஆக்சிஜன் அளவை காட்டும் பல்ஸ்  ஆக்சி மீட்டர்கள் வழங்குவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  தமிழகமெங்கும் உள்ள பெரும்பாலான நோயாளிகளுக்கு இந்த பல்ஸ்  ஆக்சி மீட்டர் விடியா அரசால் வழங்கப்படவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.  பல்ஸ்  ஆக்சி மீட்டர் இல்லாதவர்கள் தங்கள் உடலில் ஆக்சிஜன் அளவு  92 கீழே சென்று விட்டதை எப்படி அறிவார்கள்.  கடந்த ஆண்டு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பல்ஸ்  ஆக்சிமீட்டர் செரிவு குறைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் கிடைக்காமல் இழக்க நேரிட்டதை ஊடகங்களும் நேரடியாக ஒளிபரப்பின. 

eps

கொரனோ நோய்த்தொற்று அதிவேகமாக பரவி வரும் இச்சூழலில் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் ஊரடங்கு அவசியம் இல்லை என்றும் ஒமிக்ரான் பரிசோதனை மையம் மாநிலத்தில் இல்லை என்றும்,  ஆக்சிஜன் அளவு 92 கீழே சென்றால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடக் கூடாது.  பேட்டி அளிக்கும் போது தான் அரசாங்கத்தின் பிரதிநிதி என்பதை மனதில் வைத்து,  தான் செல்லும் ஒவ்வொரு சொல்லும் , ஒவ்வொரு வார்த்தைக்கும் தான்தான் பொறுப்பு என்ற உணர்வுடன் மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் அவர்கள் நடந்து கொள்ள வேண்டும்.  அதே சமயம் நோய் தொற்றால் ஏற்படும் பாதிப்புகளையும் மக்களிடம் உள்ளது உள்ளபடியே தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. 

eps

ஒவ்வொரு மனித உயிரும் , அரசுக்கு முக்கியம் என்ற உன்னத நோக்கத்துடன் அம்மாவின் அரசு எப்படி கொரோனா நோய் தொற்றை  கையாண்டு, பொது மக்களின் ஒத்துழைப்போடு கட்டுக்குள் வைத்து இருந்ததோ, அதேபோல நோயை கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பும் ,கடமையும் இந்த விடியா  அரசுக்கு உண்டு என்பதை  வலியுறுத்த கடமைப்பட்டுள்ளேன்.  இந்த விடியா அரசு வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து குணப்படுத்துவது அரசின் தலையாய கடமை என்று உணர்ந்து செயல்பட வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.