"நிதியை விடுக்க மறுப்பது தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு இழைக்கும் துரோகம்"- எடப்பாடி பழனிசாமி

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை ஏற்காவிடில், மத்திய அரசின் நிதியான ரூபாய் ஐந்தாயிரம் கோடியை தமிழகம் இழக்க நேரிடும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறுவது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய கல்வி கொள்கையை ஏற்காவில் நிதியை இழக்க நேரிடும் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரூபாய் 5000 கோடியை தமிழகம் இழக்க நேரிடும் என மத்திய அமைச்சர் கூறுவது கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசோடு மத்திய அரசு கலந்து ஆலோசித்து ஒரு சமூக முடிவு எட்டப்பட வேண்டும். திடீரென நிதியை இழப்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். மும்மொழிக் கொள்கை இந்த காலத்திலும் தமிழ்நாட்டுக்கு தேவையற்றது. அதிமுக மும்மொழி கொள்கையும் எதிர்க்கிறது. மத்திய அரசு மும்மொழிக் கொள்கை திணிப்பைக் கைவிட வேண்டும். இதில் திமுக அரசு பயனற்ற விவாதம் செய்வதை தவிர்த்து மத்திய அரசிடம் வலியுறுத்தி மக்கள் நலன் சார்ந்த நல்ல முடிவை எடுக்க வேண்டும்.
மும்மொழிக்கொள்கை தமிழ்நாட்டுக்கு தேவையில்லாதது. இந்த நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது. நிதியை விடுக்க மறுப்பது தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு இழைக்கும் துரோகம். ஒன்றிய அரசு மீது மக்கள் வேதனையும், வெறுப்பும் அடைந்துள்ளனர்” னக் குறிப்பிட்டுள்ளார்.