விஜய்யை யார் அரசியலுக்கு வரச்சொன்னது?- ஈபிஎஸ்
மனிதனாகப் பிறந்தால் தன்மானமுடன் இருக்க வேண்டும், அதிமுகவில் இருக்கும் அனைவரும் தன்மானம் மிக்கவா்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

செங்கல்பட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, "தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் ஆனதும் வெளிநாடு போகிறார்; நல்ல முதலீடுகளை ஈர்க்கப்போகிறார் என நினைத்தேன். அங்கு ஒரு திரைப்பட நடிகர் கார் பந்தயத்தில் பங்கேற்றார். அவர் அரசியலுக்கு வருவதாகத் தெரிந்ததும் அவரைப் பார்க்கச் சென்றுவிட்டார். எங்கே தனக்குப் போட்டியாக வந்துவிடுவார் என நினைத்து, அவரைப் போலவே உடை அணிந்துகொண்டார். அது அனைத்தும் ரீல்ஸாக வெளியே வருகிறது. சில கட்சிகள் ரீலஸ் விடும் கட்சிகள். ரியலாக இருப்பது அதிமுகதான். இங்கு தொண்டனும் ஒன்றுதான், நானும் ஒன்று தான். உயிரோட்டமுள்ள கட்சியை பலர் உடைக்கவும், முடக்கவும் பார்க்கின்றனர். யாராலும் அதிமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது.
மனிதனாகப் பிறந்தால் தன்மானமுடன் இருக்க வேண்டும், அதிமுகவில் இருக்கும் அனைவரும் தன்மானம் மிக்கவா்கள். சிலா் வேடந்தாங்கல் பறவைகளைப்போல் சீசனுக்கு ஏற்றாற்போல் கட்சி மாறுவாா்கள், அவா்களைப்பற்றி கவலையில்லை. விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி வாங்கினாராம், இப்போது அதை விட்டுவிட்டு வந்தாராம்; யாா் வரச்சொன்னது? ரூ.200 கோடியை விட அதிகமாக கிடைக்கும் என நினைத்துதான் படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளாா். ஜனநாயகன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட தயாரிப்பாளருக்கு தமிழக டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கி இருக்கிறார்கள்" என்றார்.

