தவெக அளவிற்கு அதிமுக ஐடி விங் சரியாக செயல்படவில்லை! அதுவே தோல்விக்கு காரணம் - எடப்பாடி பழனிசாமி

 
eps

தேர்தலின்போது அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

eps

கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மாவட்ட நிர்வாகிகளுடன் தேர்தல் தோல்வி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். தருமபுரி நிர்வாகிகளுடனான கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பங்கேற்கவில்லை. தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் கே.பி.அன்பழகனின் மா.செ. பதவி பறிக்கப்பட்டிருந்தது. மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்த பின் அமைப்பு செயலாளர் பதவி மட்டுமே வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சரும், பாலக்கோடு எம்எல்ஏவுமான கே.பி.அன்பழகன் புறக்கணித்தார். 


கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தவெகவினர் சமூக வலைதளம் மூலமாகவே கட்சியை வளர்த்து ஆட்சியை பிடித்தனர். தேர்தலின்போது அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரியாக செயல்படவில்லை. இனி ஏஐ தொழில்நுட்பத்தை திறமை்ாக பயன்படுத்துவோருக்கே அதிமுக ஐடி விங்கில் பதவி வழங்கப்படும். தவெக அளவுக்கு அதிமுக ஐடி விங் செயல்படவில்லை. தற்போதைய ஆட்சியாளர்களுக்கு விவசாயிகளின் உழைப்பின் அருமை, அவர்களின் கஷ்டம் தெரியாது. அதனால் தான் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை தற்போதைய ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை. தேர்தல் தோல்விக்கு ஐ.டி.விங் மட்டும் தான் காரணம் என்று நினைக்காதீர்கள், பிற சார்பு அணிகளும் சரியாக செயல்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெற அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும்.
” என்றார்.