"அதிமுகவில் சாமானிய தொண்டன் கூட முதல்வராகலாம்"- எடப்பாடி பழனிசாமி
‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை இன்று ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டார்.
பின்னர் சுற்றுபயணத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆள்வதனால் இன்று விலைவாசி உயர்ந்து, ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி குண்டாறு திட்டம் விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் அவை மீண்டும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். அதிமுகவில் சாமானிய தொண்டன் கூட பொதுச்செயலாளர் ஆகலாம், தமிழ்நாட்டின் முதல்வராகலாம். காவிரி குண்டாறு திட்டம் விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் அவை மீண்டும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும். 523 வாக்குறுதிகளில் திமுக 10% வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளது. கடைகளுக்கு 150 % வரி உயர்ந்துள்ளது. மின் கட்டண உயர்வு 67% உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி, ரூ. 75 கோடி மதிப்பில் சட்டக் கல்லூரி, ஒரே ஆண்டில் 6 அரசு சட்டக் கல்லூரி, 26 பாலிடெக்னிக் கல்லூரி, 67 கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள், தொழிலாளிகள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒரே அரசாங்கம் அதிமுக. 2021 சட்டமன்றத் தேர்தலில் வேண்டுமென்றே திட்டமிட்டு 525 நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு இன்று விழிபிதுங்கி நிற்கின்றார் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்தால் மானிய டீசல், மீன் பிடி குறைவு கால நிதி உயர்த்தி வழங்கப்படும், மீனவர்கள் வாழ்வாதாரம் கருதி அதிமுக ஆட்சி அமைந்தால் கச்சத்தீவு மிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.


