“ கனிமொழி மாற்றி மாற்றி பேசி வருகிறார்”- எடப்பாடி பழனிசாமி

 
eps eps

உங்களுடன் ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் திட்டம். வரும் 2026 தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த திட்டம். மக்களுக்காக அல்ல.. என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

eps

மானாமதுரையில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சியில் மளிகைப் பொருட்களின் விலை மலை போல் உயர்ந்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் மக்களை ஏமாற்றும் திட்டம். வரும் 2026 தேர்தலை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த திட்டம் மக்களுக்காக அல்ல. மக்களின் பேராதரவு இருப்பதால் 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி 210 தொகுதிகளிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கனிமொழி மாற்றி மாற்றி பேசி வருகிறார். வெளிநாடுகளுக்கு சென்றபோது ஒரு மாதிரியாகவும், நாடாளுமன்றத்தில் ஒரு மாதிரியாகவும் பேசுகிறார். திமுக ஆட்சியில் குற்றத்திற்கு குறையில்லை. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்றவை நடக்காத நாட்களே இல்லை. ஸ்டாலின் மக்களை நம்பாமல் கூட்டணி கட்சிகளை நம்பி தான் உள்ளார். அதிமுக மக்களை நம்பி இருக்கிறது” என்றார்.