திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம் என நாங்கள் கூறவே இல்லை- எடப்பாடி பழனிசாமி

 
திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம் என நாங்கள் கூறவே இல்லை- எடப்பாடி பழனிசாமி திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம் என நாங்கள் கூறவே இல்லை- எடப்பாடி பழனிசாமி

பொய் வாக்குறுதி தந்து இளைஞர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது திமுக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தஞ்சாவூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ ஆண்டுகாலம் தீர்க்கப்பட முடியாத நதிநீர் பிரச்சனையை உச்சநீதிமன்றத்தின் மூலமாக தீர்ப்பை பெற்று ஒவ்வொரு ஆண்டும் நிலையான காவிரி நீரை பெற்று தந்த அரசு அதிமுக. 2011 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் 21 அரசு மருத்துவக் கல்லூரி திறந்து வைத்து இந்திய அளவில் அதிமுக வரலாற்று சாதனை படைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 5.30 லட்சம் பேருக்கு அரசின் மூலமாக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக திட்டமிட்டு பொய் பேசி, இளைஞர்களை ஏமாற்றி வந்த அரசு திமுக. அதிமுகவின் கொள்கை நிரந்தரமானது. கொள்கை வேறு, கூட்டணி வேறு.அதிமுகவிற்கு கொள்கையென்பது எப்பொழுதும் நிரந்திரமானது. எந்த சூழ்நிலையிலும் கொள்கையை நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

s

திமுக ஆட்சியில் திட்டங்களை சொல்ல 4 துறைகளின் செயலாளர்களை நியமித்து இருக்கிறார்கள். கேட்கவே வெட்கமாக இல்லையா? அதிலும் பச்சை பொய் சொல்கிறார்கள். அதிமுக ஆட்சி வந்ததும் விசாரணை நடத்தப்படும். இந்த தேர்தலோடு கருணாநிதி குடும்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே தலைவர் பதவிக்கு வர முடியும். ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை, கிளைச் செயலாளர் கூட பொதுச்செயலாளர் பதவிக்கு வரலாம். வாரிசு அரசியல் தேவையா? திமுகவை பொறுத்தவரை குடும்பத்திற்கு மட்டும்தான் அனைத்து உரிமையும், கட்சியில் உழைப்பவனுக்கு அல்ல.

திருமாவளவன் தவறான தகவலை கூறிவருகிறார். திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம் என நாங்கள் கூறவே இல்லை. மக்கள் மற்றும் விவசாயத்தின் வாழ்வாதாரத்தை காக்க புயல் வேகத்தில் செயல்பட்டது அதிமுக அரசு. திமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் வரும்; வருவாயை உயர்த்துவோம் என்று சொன்னார்கள். ஆனால் நிபுணர்கள் குழு அமைத்த பிறகு, கடன் வாங்கியது மட்டும்தான் மிச்சம்” என்றார்.