"பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது"- எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் அவர்களே... பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது! பொறுத்திருந்து பாருங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பயணத்தின்போது காட்டுமன்னார்கோவில் பகுதியில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பெயர் வைப்பதில் நோபல் பரிசு பெற்றவர் ஸ்டாலின். காட்டுமன்னார்கோயிலில் உள்ள ஆதனூர் தடுப்பணை பணி முடிந்தும் திறக்கவில்லை. வென்டிலேட்டர் பொருத்தி திமுக ஆட்சி ஓடிக்கொண்டிருக்கிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் வென்டிலேட்டரை எடுத்துவிடுவார்கள். ஆட்சி முடிந்துவிடும். கூட்டணி கட்சித் தலைவர்களே உஷாராக இருங்கள். seats- ஐ குறைத்துவிடுவார்கள். அப்பறம் வேறு எங்கே போக முடியும் நீங்க? எல்லாம் ஜால்ரா அடிக்குறாங்க.
நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை தட்டிக் கேட்க திமுக கூட்டணி கட்சிகளுக்கு வக்கில்லை. இஸ்லாமிய மக்களை, கண் இமையைக் காப்பது போல பாதுகாத்த கட்சி அதிமுக. சிறுபான்மை மக்களே.. எடப்பாடி பழனிசாமி என்றைக்கும் உங்களுக்காக குரல் குடுப்பவன்.. கூட்டணி வேறு.. கொள்கை வேறு.. நான் என்றைக்கும் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன். ஸ்டாலின் அவர்களே... பிரம்மாண்டமான கட்சி ஒன்று அதிமுக கூட்டணியில் இணைய உள்ளது! பொறுத்திருந்து பாருங்கள்” என்றார்.


