“வீடு வீடாக பிச்சை எடுத்த கட்சி திமுக”- எடப்பாடி பழனிசாமி

 
eps eps

புதிதாக நியமிக்கப்பட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் உண்மையான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

நெய்வேலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பேசுகையில், “புதிதாக நியமிக்கப்பட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகளும் உண்மையான செய்தியை நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும். ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க ஏதாவது தவறான, பொய்யான செய்தி தெரிவித்தால், அதிமுக 2026ல் ஆட்சிக்கு வரும் தக்க பதிலடி கொடுக்கும். விஞ்ஞான மூளை படைத்தவர்கள் திமுகவினர். தேர்தல் வந்துவிட்டாலே தலைவன் முதல் தொண்டன் வரை மக்களை ஏமாற்றும் கூட்டம்தான் திமுக. விஞ்ஞான மூளை படைத்தவர்கள் திமுகவினர், தேர்தல் வந்துவிட்டாலே தலைவன் முதல் தொண்டன் வரை மக்களை ஏமாற்றும் கூட்டம்தான் திமுக. வீடு, வீடாக வருவார்கள் உஷாராக இருங்கள். நான்காண்டு காலமாக திமுக தலைவர் ஸ்டாலின் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. தற்போது திமுகவினர் வீடு, வீடாக சென்று குறைகளை கேட்கிறார்கள். பிச்சை எடுத்த கட்சி, இந்தியாவிலேயே உறுப்பினர் சேர்ப்பதற்கு வீடு வீடாக சென்று பிச்சை எடுத்த கட்சி திமுக கட்சி ஒன்றுதான்.

2026ல் அதிமுக வெற்றிவாகைச் சூடும். திமுக கோட்டையை விட்டு ஓடும். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். BYE BYE STALIN. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மக்களிடம் சென்று பெட்டியில் மனுவை பெற்று ஆட்சிக்கு வந்தபிறகு தீர்ப்பேன் என்றார். பிறகு எதற்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்? குறிஞ்சிப்பாடி திமுக அமைச்சர் பன்னீர்செல்வம் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும். அடுத்தாண்டு தேர்தலை மனதில் வைத்து, மேலும் 50 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை அறிவித்து ஏமாற்றுகின்றனர். அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும்” என்றார்.