அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமை தொகை வழங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி

 
அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமை தொகை வழங்கப்படும்   - எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமை தொகை வழங்கப்படும்   - எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமை தொகை வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

வானூர், மயிலம் செஞ்சி சட்டமன்ற தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என மிகப் பெரிய பொய்யை சொல்லி மாணவர்களை பெற்றோர்களையும் ஏமாற்றியது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் 2026. தேர்தல் வரை மட்டுமே மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். ஆட்சிக்கு வந்து 28 மாதங்களுக்கு பிறகு அதிமுக அழுத்தால் மகளிருக்கு ரூ.1000 திமுக கொடுத்தது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் மன நிறைவு பெறும் வரை உதவித்தொகை வழங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தால் அனைத்து மகளிருக்கும் ரூ.1,500 உரிமை தொகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறையாது என மத்திய அரசு தெளிவுப்படுத்திவிட்டது. தொகுதி மறுவரையறை பற்றி எந்த அறிவிப்பும் வரவில்லை. அதற்கு எப்படி கருத்து சொல்ல முடியும்” என்றார்.