“ஆட்சி காலம் முழுவதும் கும்பகரண தூக்கத்தில் இருந்தார் ஸ்டாலின்! முதல்ல உங்க கட்சியை காப்பாற்றுங்க”- ஈபிஎஸ்

 
eps eps

விழுப்பரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

s

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எப்போதும் அதிமுகவின் கோட்டை. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவை வெற்றிப் பெறச் செய்து, அதை மக்களாகிய நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். அம்மா மினி கிளீனிக் கொண்டு வந்தோம். அதை முடக்கிவிட்டனர். புரட்சி தலைவி அம்மா தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டுவந்தார். இன்று தங்கம் பவுன் ரூ.60,000 ஆகிவிட்டது. அதையும் நிறுத்திவிட்டார்கள். மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்குவதை நிறுத்திவிட்டனர். அரசுப் பள்ளி மாணவர்கள், ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்ள ஏதுவாக, 7.5% உள் ஒதுக்கீடு கொண்டுவந்தோம். இன்றைக்கு அதனால் 2,818 பேர் மருத்துவ படிப்பை படித்துள்ளார்கள். இதுதான் சாதனை. இன்றைக்கு இப்படி ஒரு சாதனையை திமுகவால் சொல்ல முடியுமா?

மகளிருக்கு உரிமை தொகை கொடுத்துவிட்டதாக ஸ்டாலின் சொல்கிறார். எப்ப கொடுத்தீங்க? அதிமுக சட்டமன்றத்துல தொடர் கோரிக்கை வைத்ததால், 28 மாதங்களுக்கு பின் கொடுத்தீங்க. இப்ப கூடுதலாக 30,000 பேருக்கு தர்றாங்களாம். தேர்தலுக்காக பெண்களை ஏமாற்றுகிறார்கள். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இப்ப இன்பநிதி வந்துவிட்டார். இது என்ன மன்னராட்சியா? குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல் 2026 தேர்தல். ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி அதிமுக. அதனால் தான் சாதாரண விவசாயியான நான் உயர் பதவிக்கு வந்துள்ளேன். மாணவர்களுக்கு கல்லூரி திறக்க பணம் இல்லையாம். ஆனா உங்க அப்பாவுக்கு எழுதாத பேனாவை நடுக்கடல்ல வைக்க 82 கோடி செலவிடுவீங்களா? உங்க மகன் கார் ரேஸ் நடத்த 42 கோடி செலவு. நம்மளுக்கு சைக்கிளுக்கே வழியில்லாத நிலையில, கார் பந்தயம் தேவையா?

Image

நான் துரோகம் செய்துவிட்டேனாம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்னை தேர்வு செய்தார்கள், நான் முதல்வர் ஆனேன். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நீங்க என்ன பண்ணினீங்க? சபாநாயகரின் கையை பிடித்து இழுத்து, அந்த புனிதமான நாற்காலியை கீழே தள்ளினார்கள். திமுகவினர் செய்த செயல்களை மீறி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றோம். அப்போது நம்மோடு இருந்த கருங்காலிகள் சிலர், திமுகவோடு சேர்ந்து ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்ற பின் ஸ்டாலின் சட்டையை கிழித்துக்கொண்டு போனார். திமுகவுடன் இணைந்துள்ள கட்சிகள் எல்லாம் ஒற்றை கொள்கையுடைய கட்சிகளாம். காங்கிரஸும், திமுகவும் ஒரே கொள்கை உடைய கட்சிகளா? விசிகவும், திமுகவும் ஒரே கொள்கையுடைய கட்சிகளா? அமைச்சர்களால் தூக்கமில்லை என்கிறார். முதல்ல உங்க கட்சியை காப்பாற்றுங்க. ஆட்சி காலம் முழுவதும் கும்பகர்ண தூக்கத்தில் இருந்தார் ஸ்டாலின். தற்போது தேர்தல் வருவதால் முழித்துக் கொண்டு மக்களை சந்திக்க வருகிறார்” என பேசினார்.