2026ல் Bye Bye Stalin என சொல்ல மக்கள் தயாராகிவிட்டார்கள்- ஈபிஎஸ்
விழுப்பரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “மதுரை மாநகராட்சியில் ஊழல் நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊழல் செய்தவர்களை பாதுகாப்பதற்காக மண்டல அதிகாரிகளை ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த ஊழல் தொடர்பாக விசாரிக்கப்படும். அறநிலையத்துறை நிதியில் கல்லூரிகள்: ஏன் திமுக அரசு திவால் ஆகிவிட்டதா? கடலில் உங்க அப்பாவுக்கு பேனா சிலை அமைக்க 82 கோடி இருக்கு, உங்க மகன் உதயநிதி ஸ்டாலின் கார் பந்தயம் நடத்த 42 கோடி இருக்கு, ஊதாரித்தனமா செலவு செய்ய பணம் இருக்கு, கல்லூரி கட்ட பணம் இல்லையா?
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான். Corruption, Collection, Commission தான் இந்த அரசின் தாரக மந்திரம். டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது. பாதி அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை எப்போது வீட்டுக்கு வரும் என்கிற பயம் உள்ளது. உங்க அப்பா முதல்வராக இருந்தார். அவரால் நீங்க முதல்வர் ஆகியிருக்கீங்க. நான் அப்படியில்லை. உழைப்பால் உயர்ந்து, நான் முதல்வர் ஆனேன். ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து கட்சிக்காக பணி செய்து வந்துள்ளேன். இப்படி திமுகவில் ஒருவரால் வர முடியுமா? நீட் ரத்து செய்வோம்னு சொன்னாங்க. நீட் தேர்வை மத்தியில் காங்கிரஸ் அரசும், அதில் அங்கம் வகித்த திமுகவும் 2010ல் கொண்டு வந்தாங்க. டிசம்பர் 21, 2010ல் அரசாணை வெளியிட்டார்கள். 4 வருடங்களாக மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்பவாவது ரகசியத்தை சொல்லுங்க. 2026ல் Bye Bye Stalin என சொல்ல மக்கள் தயாராகிவிட்டார்கள். Bye Bye Stalin. உங்களில் நான், உங்களோடு நான், உங்களுக்காகவே நான் பணியாற்றுவேன். வீடு வீடாக சென்று பிச்சை எடுப்பது போல் எங்கள் கட்சியில் சேருங்கள் சேருங்கள் என்று மக்களிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் திமுகவிற்கு;அஇஅதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. நூறு நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக மாற்றுவோம் என்றனர். செய்தார்களா? அதை இன்றைக்கு 50 நாட்களாக குறைத்துவிட்டார்கள். இந்த நூறு நாள் திட்டத்திற்கான நிதியை, நானும், சகோதரர் சி.வி சண்முகம் உட்பட அதிமுகவை சேர்ந்த 5 பேரும் வாங்கிக் கொடுத்தோம்” என்றார்.


