“விவசாயிகளுக்கு துரோகம்... 2 முறை மோடியை சந்தித்த ஸ்டாலின் அதைபற்றி பேசவே இல்லை”- எடப்பாடி பழனிசாமி

 
s s

மதுரை மாவட்டம் மேலூர் சட்டமன்றத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அப்பகுதி மக்கள், அதிமுக தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 

Image


சுற்றுப்பயண பரப்புரையில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “2001 முதல் 2021 வரை மேலூர் தொகுதியில் தொடர் வெற்றியை அதிமுகவுக்கு மேலூர் மக்கள் கொடுத்து வருகிறீர்கள். 2026ல் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். விடியா திமுக அரசு விவசாயிகளுக்கு இன்று துரோகம் செய்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இன்று ராமநாதபுரத்தில் தொடங்க ஒப்புதல் அளித்துள்ளார்கள். நான் எதிர்த்த உடன், அமைச்சர் தங்கம் தென்னரசு மறுத்தார். ஆனால் இன்னும் திட்டம் ரத்தாகவில்லை. பத்திரிக்கைகளில் ஒருபோதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்கமாட்டோம் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு. ஆனால் ராமநாதபுரத்தில் அதற்கான பணிகள் தொடங்கியிருக்கின்றன. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நிறுத்தி வைத்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த அம்மாவின் அரசு முயற்சி மேற்கொண்டது. அதை 152 அடியாக உயர்த்த வேண்டும். ஆனால் கேரள அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இண்டி கூட்டணியில் உள்ள ஸ்டாலின், இடதுசாரிகளுடன் பேசலாமே?

2026ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் மதுரையில் துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 முறை தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி, தொழில் முதலீடுகளை ஈர்த்தோம். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது , ஒழுங்கற்ற செயல்களில் COMPROMISE என்ற பேச்சுக்கே  இடமிருக்காது. 2023ல் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒப்புதல் கொடுத்தது திமுக அரசு. அதற்கு எதிர்ப்பு வந்த உடன், ரத்து செய்கிறோம் என்று நாடகம் ஆடியது. 2021 நவம்பரில் அதற்கு ஏலம் நடத்தினர். அரிட்டாப்பட்டி மக்கள் போராட்டத்திற்கு, அதிமுக துணை நின்றது. டங்ஸ்டன் டெண்டர் இறுதியாகும் வரை மௌனம் காத்தது திமுக அரசு. பிரதமரை 2 முறை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் பிரதமரிடம் ஒருமுறை கூட அதுபற்றி கோரிக்கை வைக்கவில்லை. சட்டமன்றத்தில் நான் தனித் தீர்மானம் கொண்டுவந்த உடன், அதை ரத்து செய்தார்கள்” என்றார்.