"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது" - ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!

 
admk

முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர் கதையாக உள்ளது என்று ஈபிஎஸ் விமர்சித்துள்ளார். 

eps

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் காலை10 மணிக்கு கூடியது.  இதில் முதல் முறையாக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்றினார். இருப்பினும் ஆளுநர் உரை தொடங்குவதற்கு முன்பே சட்டம் ஒழுங்கு பிரச்சனை, அம்மினி கிளினிக் மூடல் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையை புறக்கணித்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதேபோல் நீட் தேர்வில் விலக்கு அளிக்காதது குறித்து  எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பெண்கள் இனி ‘மேக் அப்’ போடத்தான் இருக்கணும்-2.5 லட்சம் சிசிடிவி கேமராவுக்குள்  சென்னை- பெண்கள் பாதுகாப்பில் EPS பெருமிதம்

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கஞ்சா , குட்கா போன்ற போதை பொருட்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது.  போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. அதேபோல் தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியுள்ளது.  சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால் உட்பட எதுவும் கிடைக்கவில்லை. திமுக அரசு சரியாக செயல்படாததால் சென்னை வெள்ளத்தில் மூழ்கியது. திமுக அரசு மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்களுக்கு எந்த நிவாரணத் தொகையையும் வழங்க வில்லை" என்றார். 

eps

தொடர்ந்து பேசிய அவர், "வெளிமாநிலத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு டன் கணக்கில் குட்கா போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடுவது தொடர் கதையாக உள்ளது. பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் உருவாகியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது .சட்டம்-ஒழுங்கை சரி செய்ய முதலமைச்சர் தனி கவனம் செலுத்தவில்லை. பொங்கல் பரிசு தொகையை கூட மக்களுக்கு திமுக அரசு வழங்கவில்லை. சிறப்பாக செயல்பட்டு வந்த அம்மா மினி கிளினிக்குகளை திமுக அரசு மூடியுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.