"சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கவனிக்காமல் கும்பகர்ண தூக்கம்"- ஈபிஎஸ் விமர்சனம்

 
EPS

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 6 மாதத்தில் சிறப்பான ஆட்சி கொடுப்போம் என்றார், ஆனால் துயரமான ஆட்சி தான் கொடுத்து வருகிறார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "போதைப்பொருட்கள் கிராமம் முதல் நகரம் வரை அமோகமாக விற்பனை நடைபெற்றுவருவதாக செய்திகள் வருகிறது. பொருளாதாரத்தை ஒப்பிட்டு பேசலாம், கொலை சம்பவங்களை ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. தமிழகத்தில் கொலை கள் நடக்காத நாளே இல்லை. தீபாவளியன்று 11 கொலைகள் நடந்துள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போலீசாருக்கே பாதுகாப்பில்லை.  அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 6 மாதத்தில் சிறப்பான ஆட்சி கொடுப்போம் என்றார், ஆனால் துயரமான ஆட்சி தான் கொடுத்து வருகிறார்கள்.  சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கவனிக்காமல் கும்பகர்ண தூக்கத்தில் அரசு இருக்கிறது; கஞ்சா, நம்பர் லாட்டரி மிக சாதாரணமாக புழக்கத்தில் உள்ளன. கடந்த 6 மாதமும் மக்களுக்கு துயரமான ஆட்சியாகவே இந்த ஆட்சி நடந்துள்ளது. 

இந்த தீபாவளிக்குத்தான் கொலை நடந்ததா? இதற்கு முன்பு திமுக ஆட்சியில் ஒவ்வொரு தீபாவளியின்போதும் எத்தனை கொலைகள் நடந்தன என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பட்டியலிட்டார். அது அழகல்ல. ஒரு அரசு இத்தகைய சம்பவங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்குத்தான் ஆட்சிப் பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். பொருளாதாரத்தை ஒப்பிட்டுப் பேசலாம்; ஆனால், கொலைச் சம்பவங்களை ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போலீசாருக்கே பாதுகாப்பில்லை. தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் ஆகியும் பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் ரீலஸ் ஆட்சி மட்டுமே நடைபெறுகிறது"என்றார்.