ஆட்சி அதிகாரம் வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கேட்கத் தொடங்கிவிட்டன- ஈபிஎஸ்

 
EPS EPS

ஆட்சி அதிகாரம் வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகள் கேட்கத் தொடங்கிவிட்டன என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

eps

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிக இடம், ஆட்சியில் பங்கு என திமுக கூட்டணி கட்சிகள் கேட்கத் தொடங்கிவிட்டன, இதனால் திமுக கூட்டணியில் உரசல் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு, எங்கள் கூட்டணியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. நாங்கள் யாரோடு கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கஷ்டம்? திமுக கூட்டணி கட்சிகளுக்கு எங்கள் கூட்டணியை பற்றி பேச என்னத் தகுதி இருக்கு? அவர்களால் பொறுக்க முடியவில்லை. எனது கூட்டத்தில் தவெகவினரே விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர். கட்சி தலைமையின் அனுமதி பெற்று வர தவெகவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். தவெகவினர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தேவையற்ற விமர்சனம் செய்கின்றனர். டிடிவி தினகரன் நடத்துவதெல்லாம் ஒரு கட்சியா? யாரும் அவரை ஆதரிக்காததால் அதிமுகவுடன் தவெக கூட்டணி சேர்ந்துவிட்டால் பாஜகவை ஈபிஎஸ் கழட்டி விட்டுவிடுவார் என பேசுகிறார். 

காவிரி உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகள் நிரப்பும் திட்டத்தின் மூலம் இதுவரை 56 ஏரிகள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீதமுள்ள ஏரிகள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சிக்கு வந்து 54 மாதங்களாகியும் மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாமல் ஆமை வேகத்தில் திமுக செயல்பட்டு வருகிறது” என்றார்.