“வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு முடிந்து போன விஷயம்” - எடப்பாடி பழனிசாமி
வன்னியர்களுக்கான “10.5% உள் இடஒதுக்கீடு முடிந்து போன விஷயம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "விவசாயக் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது. சிபில் ஸ்கோரால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பழைய முறையிலேயே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க பிரதமர் மோடியிடம் அதிமுக சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டடதால்தான் சிபில் ஸ்கோர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
வன்னியர்களுக்கான “10.5% உள் இடஒதுக்கீடு முடிந்து போன விஷயம். இதுதொடர்பாக நாடு முழுவதும் ஒன்றிய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவும் பாஜகவும் இருக்கிறது, ஆனால் பாஜகவுடன் பல கட்சிகள் கூட்டணியில் இருக்கிறார்கள். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு யாரெல்லாம் உள்ளார்கள் என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களின் பிரச்சனையை தீர்ப்பதில் அதிமுக முன்னணியில் உள்ளது” என்றார்.


